Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், சமயபுரம் - 621112, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Mariamman Temple, Samayapuram - 621112, Thiruchirappalli District [TM025704]
×
Temple History

தல பெருமை

கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கினான். அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்துத் தோன்றினாள். அத்தேவியே மகா மாரியம்மன் என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள். மக்களின் தீமைகளையும், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தெய்வமாக சமயபுரத்தில் மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். மாரியம்மன் உற்சவர் திருமேனி ஆதியில் விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்று வந்ததென்றும் அந்த ஆட்சிக்குத் தளர்ச்சி நேர்ந்த...

புராண பின்புலம்

கர்நாடகத்தை சேர்ந்த துவார சமுத்திரத்திலிருந்து அரசாண்டு வந்த ஓய்சாளர் அல்லது போசாளர் என்ற மரபினர் 13-ஆம் நூற்றாண்டில் கண்ணனூரைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் வலிமை குன்றிய பிற்கால சோழ மன்னர்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவி செய்தனர். சோழ ராஜ்ய பரிதிஷ்டாபனாசாரியன் - சோழகுல ஏக ரக்ஷன் என அழைத்துக்கொண்டனர். போசாள மன்னன், வீரசோமேசுவரன் இந்நகரை அமைத்து இதற்கு விக்கிரமபுரம் என்று அழைத்ததை பெங்களூர் அருங்காட்சியகச் செப்பேடுகள் கூறுகின்றன. தற்பொழுது கண்ணனூரில் உள்ள போஜேசுவரம் என்று அழைக்கப்படும் சிவன்திருக்கோயில் வீர சோமேசுவரனால் கட்டப்பட்டதாகும். போசாளீசுவரம் என இத்திருக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. வீர சோமேஸ்வரனுக்குப் பின்னர் அவன் மகன் வீர ராமநாதன் கண்ணனூரிலிருந்து அரசாட்சி செய்தான். வீர ராமநாதனின் அரசாட்சி கண்ணனூர் வரலாற்றில்...